ருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களை பரிசளிக்கும் மோடி!- காரணம் இது தான்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டுக்கு செல்கையில், அந்நாட்டு அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார்.
 | 

ருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களை பரிசளிக்கும் மோடி!- காரணம் இது தான்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டுக்கு செல்கையில், அந்நாட்டு அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, திங்கட்கிழமை 5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார். அதன்படி முதலில் அவர் நாடாக ருவாண்டா நாட்டுக்குச் செல்கிறார். பின்னர் உகாண்டா சென்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். 

இவற்றைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிலையில், தனது முதமுதலாவதாக ருவாண்டா நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பால் காகமேயைச் சந்தித்து உரையாற்றுகிறார். 

ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இதற்காக ருவாண்டா நாட்டில் பாரம்பரிய முறைபடி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து ருவாண்டா நாட்டின் ரிவிரு கிராமத்துக்குச் செல்லும் மோடி, அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

அங்கு கிரிங்கா என்ற திட்டம் செயல்படுத்து வருகிறது. ஒரு ஏழை குடும்பத்துக்கு ஒரு மாடு வழங்கும் திட்டம் தான் அது.  ருவாண்டாவில் வறுமையை ஒழிக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ``பசுக்களைக் கொடுப்பது ஒரு பொருளாதாரப் பங்களிப்பு மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினரை நன்கு பராமரிப்பதற்காக ருவாண்டாவிற்கு இந்தியாவின் நன்றியுணர்வை வெளிப்படுத்த கொடுக்கப்படுகிறது" என்று  வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP