அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
 | 

அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் எவ்வித உயிர் மற்றும் பொருட் சேதங்களும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் தீவுகளில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP