மெக்சிகோவின் முதல் பெண் மேயர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாகணத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்ற மார்தா எரிக்கா அலோன்சோ ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். எரிக்கா மறைவுக்கு ஆளுநர் மற்றும் செனட் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த அரங்கலை தெரிவித்தள்ளனர்.
 | 

மெக்சிகோவின் முதல் பெண் மேயர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள பியூப்லா மாகணத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவி வகித்து வந்த மார்தா எரிக்கா அலோன்சோ ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்தார்.


மேயர் மார்தா எரிக்கா அலோன்சோ பயணம் செய்ய இருந்த ஹெலிகாப்டர் பியூப்லாவிலிருந்து புறப்பட்டது. அவரது கணவரும், செனட் உறுப்பினருமான ரபேல் மொரேனோ , உள்பட நான்கு பேர் மார்தா எரிக்கா அலோன்சோ உடன், அந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அந்த ஹெலிகாப்டர் இழந்தது. அதன் பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அந்த ஹெலிகாப்டர், காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடந்தது கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்து விட்டதாக மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.

இதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் புதிய அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ், ஆளுநர் மற்றும் செனட் சபை உறுப்பினரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP