'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கியின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 | 

'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கியின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டுக்காக எழுதி வந்தார். அதில் அவர் சவுதி அரசின் தன்னாட்சிக் குறித்தும் மனனர் குடும்பத்துக்கு எதிராகவும் விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் தனது துருக்கி நாட்டுத் தோழியை திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக, சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கஷோகி சென்றுள்ளார்.

'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!

அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரசிடம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். கஷோகி கொல்லப்பட்டதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் துருக்கி அரசு தெரிவித்தது. அவர் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

ஆனால், இதனை சவுதி அரசு மறுத்தது.  விசாரணையின் போது தவறுதலாக கஷோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று பாம்பியோவிடம், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சில தகவல்களும் வெளியாகின. இதனிடையே இதனை சரிகட்ட அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக ஒரு புதிய சர்ச்சை செய்தியும் உலா வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி கஷோகி, சவுதி தூதரகத்தில் ஒவ்வொரு விரலாக துண்டித்து சித்ரவதை செய்து பின்பு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் அரசு நாளிதழான 'யேனி சபாக்' செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான ஆடியோ ஆதாரம் கூறுவதையும் அந்த செய்திக் குறிப்பு விவரிக்கிறது. அதில், எங்களுக்கு கிடைத்துள்ள பல்வேறு ஆடியோ ஆதாரங்களின்படி, கடந்த 2ம் தேதி சவுதியின் தூதரகத்தின் உள்ளே கஷோகியின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது துருக்கியின் சவுதி தூதர் முகமது அல் ஒட்டாய்பி, 'இந்த சித்ரவதையை வெளியில் செய்யுங்கள், நீங்கள் என்னை பிரச்னையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறீர்கள்' என்று கூறுகிறார். அதற்கு நபர் ஒருவர், ‘நீ சவுதிக்கு வந்து உயிருடன் வாழ வேண்டும் என்று கருதினால் வாயை மூடிக் கொண்டு சும்மா இரு' என்று மிரட்டுகிறார் என்று விவரிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இந்த செய்தி சர்வதேச நாடுகளை அதிருப்தியடைய செய்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP