'வங்கிக் கடனை அடைக்க விடாமல் தடுக்கின்றனர்'- மல்லையா புகார்

பொதுத்துறை வங்கிக் கடன்களை அடைக்க முயற்சிக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை அதைத் தடுத்துவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 | 

'வங்கிக் கடனை அடைக்க விடாமல் தடுக்கின்றனர்'- மல்லையா புகார்

பொதுத்துறை வங்கிக் கடன்களை அடைக்க முயற்சிக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை அதைத் தடுத்துவிடுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்காத தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதுபற்றி வழக்கு தொடர்ந்ததை அடுத்து மல்லையா செய்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதன்பேரில் மல்லையா மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடித்தி கொண்டு வரவும் ஏற்பாடு நடந்து வருகிறது

விஜய் மல்லையாவின் ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

ஆனால் நாட்டுக்குத் திரும்பி வர மல்லையா மறுக்கிறார். இதனால் அவரை 'தலை மறைவு பொருளாதார குற்றவாளி' என்று அறிவிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டது. இதுகுறித்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்குப் மல்லையா சார்பாக அவரின் வழக்கறிஞர் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,  ''கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பொதுத்துறை வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் அதற்கான வேலைகளை ஆயத்தப்படுத்த முயலாத அமலாக்கத்துறை, என்னுடைய முயற்சிகளைத் தடுத்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிப்பதற்கு மறுப்பு தெரிவித்த மல்லையா, தன்னை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இந்தியா வருவதற்குத் தான் ஒருபோதும் மறுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

லண்டன் நீதிமன்றத்தில் இதுகுறித்த தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே மும்பை சிறப்பு நீதிமன்றம் அடுத்த விசாரணை செப்.28-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP