மடகாஸ்கர்: ஏவா சூறாவளி தாக்கியதில் 29 பேர் பலி

மடகாஸ்கர்: ஏவா சூறாவளி தாக்கியதில் 29 பேர் பலி
 | 

மடகாஸ்கர்: ஏவா சூறாவளி தாக்கியதில் 29 பேர் பலி


ஆப்பிரிக்காவுக்கு அருகே உள்ள மடகாஸ்கர் தீவுகளில் ஏவா என்ற சூறாவளி கடந்த சில தினங்களாக கடுமையாக தாக்கியது. இதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த வாரம் வெள்ளி முதல், ஞாயிறு வரை ஏவா புயல் மடகாஸ்கரை கடுமையாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேதங்களை பற்றி அந்நாட்டு அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், 29 பேர் இறந்துள்ளதாகவும், 22 பேர் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் 17,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 80,000க்கும் மேற்பட்டோர் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

5 முக்கிய தேசிய சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், 17 மருத்துவமனைகள் முற்றிலும் சேதமடைந்தன. சுமார் 3,200 ஹெக்டேர் அளவு நிலப்பரப்பிலான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP