மின்னல் தாக்கியேதே விமான விபத்துக்கு காரணம்- ரஷ்ய விமானி விளக்கம்

ரஷ்யாவில் மின்னல் தாக்கியதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவசரமாக விமானத்தை தரையிறக்கிய போது விபத்து ஏற்பட்டதாக அதன் விமானி தெரிவித்துள்ளார்.
 | 

ரஷ்யாவின், மாஸ்கோ விமான நிலயத்தில் விமானம் தரையிறங்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து,  முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு, 73 பயணிகளுடன் சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மின்னல் தாக்குதலுக்கு  உள்ளாகியது. இதனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் அவசரமாக தரையிறங்கியது. இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானி, விமானம் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியது. இதனால் விமானத்தில் தகவல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை அவசரமாக தறையிறக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்த விமானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP