லிபியா: கடாஃபி ஆதரவு ஆயுதப் படையின 45 பேருக்கு மரண தண்டனை!

2011ம் ஆண்டு நடந்த உள்நாட்டு கிளர்ச்சியின்போது பேரணியில் பங்கேற்றவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில், ஆயுதப்படையை சேர்ந்த 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

லிபியா: கடாஃபி ஆதரவு ஆயுதப் படையின 45 பேருக்கு மரண தண்டனை!

2011ம் ஆண்டு நடந்த உள்நாட்டு கிளர்ச்சியின்போது பேரணியில் பங்கேற்றவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில், ஆயுதப்படையை சேர்ந்த 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிபியா தலைநகர் திரிபோலியில் கடந்த 2011ஆம் ஆண்டில் அப்போதைய கர்னல் மம்மர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வெகுண்டெழுந்தனர். அப்போது திரிபோலியில் மாபெரும் பேரணி பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களை ஆயுதப்படையினர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.  இவர்களில் 45 பேருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் மம்மார் கடாஃபி ஆட்சி அகற்றப்பட்டபின் அங்கு ஒரே சமயத்தில் அதிகமானவர்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை இதுதான் என ஏ.எஃப்.பி செய்தி கூறுகிறது. அதோடு, இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள், வழக்கு என்று நடந்தது என்பது போலான எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. 

கடாஃபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். 2011ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு அவரது ஆட்சி அகற்றப்பட்டது.  அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக புரட்சிப் படையினருக்கு ஆதரவு அளித்தன. அதன் மூலம் அவர்கள் ஒவ்வொரு நகரமாக வசப்படுத்தினர். 

பின்னர் அதே ஆண்டு கடாஃபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். கடாஃபியின் ஆதரவாளர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து சொந்த நாட்டிலேயே அவர் தலைமறைவாக வாழ்ந்தார். குடும்பத்தினர் நாட்டை விட்டே ஓடினர். பின்னர் அவரது சொந்த ஊரில் பதுங்கு குழியில் இருந்த அவர் படுகொலை செய்யப்பட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP