விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாதிகள் அமைப்பு இல்லை என்று சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 | 

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகள் பரிக்கப்படுவதாக சிங்களவர்களுக்கு எதிராக சுமார் 30 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. தமிழர்களின் தனி உரிமைக்காக, தமிழீழம் என்ற தனி நாடு அமைக்க விடுதலைப்புலிகள் இயக்கம் போராடியது. 2009ல் நடந்த இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிரான சண்டையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அப்போது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. 

போர் சூழல் காரணமாக, சுவிட்சர்லாந்து, கனடா, சிங்கப்பூர் என பல நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கின் விசாரணை பெலின்சோனா நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதி விசாரணையின்போது அந்த 13 பேருக்கு எதிரான ஆவணங்களை சுவிட்சர்லாந்து அரசுத் தரப்பு தாக்கல் செய்தது. 

ஆனால் அந்த ஆவணங்களை நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை. அவர்கள் தங்களது நாட்டில் குற்ற செயலில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்தும் சுவிட்சர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊருக்கு எல்லாம் தெரிந்த உண்மை, அண்டை நாடான இந்தியாவுக்கு தெரியாமல் போது வேதனை என்று இலங்கைத் தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP