கொலம்பியா நாட்டில் நிலச்சாிவு- உயிாிழந்தோா் எண்ணிக்கை 20ஆக உயா்வு

கொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
 | 

கொலம்பியா நாட்டில் நிலச்சாிவு- உயிாிழந்தோா் எண்ணிக்கை 20ஆக உயா்வு

கொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொலாம்பியாவில் உள்ள கவுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முந்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 14 பேர் உயிாிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்தது.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்பொழுது 20 பேர் உயிரிழந்ததாக ராணுவத்தினா் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP