Logo

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் கிம் ஜோங் உன்!

ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இன்று முதல் முறையாக சந்தித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள விளாடிவாஸ்டோக் என்ற நகரில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
 | 

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் கிம் ஜோங் உன்!

ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் இன்று முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவில் உள்ள விளாடிவாஸ்டோக் என்ற நகரில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. 

உலக நாடுகளின் கடும் எதிர்பையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்த வட கொரியா, தற்போது அதிலிருந்து சற்று இறங்கியுள்ளது என்று கூறலாம். கடந்த ஆண்டு முதல் முறையாக, வடகொரிய அதிபர், அண்டை நாடான தென் கொரிய அதிபரை சந்தித்து பேசியது, அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசியது என வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறின. அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பின் போது, அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிடுவதாக கிம் ஜோங் உன் ஒப்புதல் அளித்தார். 

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் கிம் ஜோங் உன்!

அதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்துள்ளார். ரஷ்யாவில் விளாடிவாஸ்டோக் என்ற நகரில் இந்த வரலாற்று சந்திப்பானது நிகழ்ந்து வருகிறது. 

இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு உலக நாடுகளிடையே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP