கென்யா: மழையால் உடைந்த அணை; 47 பேர் பலி

கென்யாவில் பெய்து வந்த தொடர் மழையால், பெரிய அணை உடைந்ததில், 47 பேர் உயிரிழந்தனர்.
 | 

கென்யா: மழையால் உடைந்த அணை; 47 பேர் பலி

கென்யா: மழையால் உடைந்த அணை; 47 பேர் பலி

கென்யாவில் பெய்து வந்த தொடர் மழையால், பெரிய அணை உடைந்ததில், 47 பேர் உயிரிழந்தனர். 

இந்திய பூர்வீகம் கொண்ட மன்சுகுல் பட்டேலுக்கு சொந்தமான மலர் தோட்டத்தில் அமைந்துள்ள பெரிய அணை, மீன்பிடி மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வந்தது. கடந்த சில  தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால், பட்டேலின் நீர் தேக்கங்கள் நிறைந்து உடைந்தன. 

அதிலிருந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், 2 கிராமங்களை அடித்துச் சென்றது. இதில் 47 பேர் உயிரிழந்தனர். இரண்டு கிராமங்களின் மின் இணைப்புகள் முழுவதும் துண்டிக்கப்பட்டன. தொடர் மழையால், மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

அணை உடைந்த போது, பட்டேல் அங்கு இல்லை, வெளியூர் சென்றிருந்தார். 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP