ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

உலகெங்கிலும் நடந்த முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை பின்தொடருங்கள்...
 | 

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

மாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்

ஐரோப்பிய நாடான, யுகோஸ்லாவியா, 1991ல், சிதறுண்டபோது, மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. இருப்பி-னும், மாசிடோனியா என்ற பெயரை பயன்படுத்த, அண்டை நாடான, கிரீஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

கிரீஸ் நாட்டின் வடபகுதியும், மாசிடோனியா என அழைக்கப்படுவதால், அப்பகுதியை, புதிய நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என்ற அச்சமே அதற்கு காரணம். இதனால், ஐரோப்பிய யூனியன் மற்றும், 'நேட்டோ' அமைப்பில், மாசிடோனியா சேர்வதை, சிறப்பு அதிகாரம் மூலம், கிரீஸ் தடுத்து வந்தது. 

இந்நிலையில், மாசிடோனியா அரசு, தங்கள் நாட்டின் பெயரை, 'வடக்கு மாசிடோனியா குடியரசு' என மாற்-றம் செய்ய, கிரீஸ், சம்மதித்தது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தம், மாசிடோனியா - கிரீஸ் இடையே, நேற்று கையெழுத்தானது. இதன்மூலம், கிரீஸ் - மாசிடோனியா இடையிலான, 27 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 6 வாரங்களில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையால், கடந்த 6 வாரங்களில் மட்டும் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்
 

மாசுபாடு விவகாரத்தில் ஆடி கார் நிறுவன சி.இ.ஓ கைது

அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், ஆடி நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. போலியாக விளம்பரம் வெளியிட்டு ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெற்றது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி, 100-க்கும் அதிகமானோர் காயம்

ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுகத்தின் சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை, இதுவரை 3 பேர் இறந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

சிரியாவில் அரசு ஆதரவு படைகள் மீது வெடிகுண்டு தாக்குதல்; 38 பேர் பலி

ஈராக்கை ஒட்டிய சிரியாவின் கிழக்கு எல்லை அருகே அல் ஹாரி என்ற இடத்தில் அரசு ஆதரவு படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  இது ஐ.எஸ். குழுவினரின் ஆதிக்கம் நிறைந்த டெயிர் எஸ்ஸார் மாகாணத்திற்கு உட்பட்டது.  இந்த சம்பவத்தில் 38 வெளிநாட்டு போராளிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 

இதுபற்றி சிரிய அரசு ஊடகம் வெளியிட்டு உள்ள தகவலில், ஐ.எஸ். குழு மீது போர் தொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு கூறியுள்ளது.

இதற்கு பதிலளிக்க கூட்டணி படையினர் மறுத்து விட்டனர்.  இதனால் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

கடந்த மே மாதத்தில், சிரிய ராணுவ முகாம்கள் மீது நடந்த வான்வழி தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட சிரிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர்.  இதற்கு கூட்டணி படை மீது சிரிய ஊடகம் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது.  ஆனால் பென்டகன் இதனை மறுத்திருந்தது.

ஜூன்.18, 2018 - உலக செய்திகள்

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP