ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

உலகெங்கிலும் நடந்த முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை பின்தொடருங்கள்...
 | 

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

டிரம்ப் - கிம் ஜோங் உன் நாளை சந்திப்பு

 

சிங்கப்பூர்: 60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர்.

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 15 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்
 

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு

 

ஷாங்காய் மாநாட்டில் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்தது. 

இது தொடர்பாக மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எந்த ஒரு மெகா இணைப்பு திட்டமும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும், இதையெல்லாம் உள்ளடக்கிய முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கும்” என குறிப்பிட்டார்.

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

சிங்கப்பூர் பிரதமர் லீ உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திப்பு

சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். ட்ரம்ப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர். இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ட்ரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். 

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

லண்டனில் நீரவ் மோடி: இங்கிலாந்திடம் தஞ்சம் வேண்டி கோரிக்கை 

பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது இங்கிலாந்திடம் அடைக்கலம் கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜூன்.11, 2018 - உலக செய்திகள்

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP