ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

உலகெங்கிலும் நடந்த முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை பின்தொடருங்கள்...
 | 

ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

பிரான்ஸில் அனுமதியின்றி தங்கியிருந்த 1,000 அகதிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான், சோமாலியா, எரித்திரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பாரீஸ் அருகே கூடாரம் அமைத்திருந்து தங்கியிருந்தனர். இவர்களால் மார்ட்டின் கால்வாய் நீர் அசுத்தமாவதாகவும், அனுமதி பெறாமல் தங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கால்வாய் கரையில் தங்கியிருந்தவர்களை போலீசார் வெளியேறுமாறு கூறினர். மறுத்தவர்களின் கூடாரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீசார் அகற்றினர். இதையடுத்து அங்கிருந்த அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

மேடையில் பெண்ணுக்கு முத்தமிட்ட பிலிப்பைன்ஸ் அதிபர்!

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, பொதுநிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவருக்கு முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அங்கே தென்கொரியா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு, தாம் இலவசமாக புத்தகம் தருவதாக, ரோட்ரிகோ கூறினார். இதையடுத்து, மேடைக்கு வந்த பெண்ணின் நீண்ட கூச்சத்துக்குப் பிறகு, அவரது உதட்டில் ரோட்ரிகோ முத்தமிட்டார். இந்த சம்பவம், தென்கொரியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன்-மகள் போட்டி

பாகிஸ்தானில் ஜூலை மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன், மகள் போட்டியிடுகின்றனர்.

ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

இந்தியாவுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை: பாக்.ராணுவம்

இந்தியாவுடன் எந்த சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை ஏற்படுத்தவே பாக். எடுத்துள்ள இந்த முடிவை வைத்து பாக். ராணுவம் பலவீனம் அடைந்துவிட்டதாக இந்தியா தவறாக கருத கூடாது. இந்த ஆண்டு துவக்கத்தில் இதுவரை 1,077 முறை இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்.மீது தாக்குதல் நடத்தியுள்ளது என பாக். ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் கூறினார்.

ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நேரம் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கான நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஜூன் 12ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நிகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜூன்.05, 2018 - உலக செய்திகள்

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP