இந்தோனேஷியாவின் அதிபராக ஜோகோ விடோடா தேர்ந்தெடுப்பு!

இந்தோனேஷியாவில், 2வது முறையாக ஜோகோ விடோடா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 | 

இந்தோனேஷியாவின் அதிபராக ஜோகோ விடோடா தேர்ந்தெடுப்பு!

ஜோகோ விடோடா இந்தோனேஷியாவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஜோகோ விடோடா 55.5 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபரானார் . 

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெனரல் பிராபோ சுபியாந்தோ  44.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், தேர்தலில் முறைகேடு செய்து ஜோகோ வெற்றிப்பெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். 

ஆனால் தேர்தல் பார்வையாளர் குழு, தேர்தலில் முறைகேடு செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை, தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, தலைநகர் ஜகர்த்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP