யூத நாடக அறிவிக்கப்படும் இஸ்ரேல்

யூத நாடக அறிவிக்கப்படும் இஸ்ரேல்
 | 

யூத நாடக அறிவிக்கப்படும் இஸ்ரேல்

இஸ்ரேலை யூத நாடாக அறிவித்த புதிய மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது “மதம், இனம், பாலின பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக, அரசியல் உரிமைகள் வழங்கப்படும் எனவும்  மத, மொழி சுதந்திரம் பாதுகாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி இஸ்ரேலில் 85.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். யூதர்கள் 74.5 சதவீதம் பேரும், பாலஸ்தீனர்கள் 20.9 சதவீதம் பேரும், மற்ற இனங்களைச் சேர்ந்த மக்கள் 4.6 சதவீதம் பேரும் இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேலை யூத நாடாக அறிவிக்கும் புதிய மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது . நாடாளுமன்றத்தில் எட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மசோதாவுக்கு ஆதரவாக 62 பேரும் எதிராக 55 பேரும் வாக்களித்ததால் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.  இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீப்ரு மொழிக்கு முதலிடம் அளிக்கப்பட்டு, அரபு மொழி புறக்கணிக்கப்பட்டது.

இந்த மசோதா இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது இதற்கு அரபு எம்.பி,க்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அதை சிறப்புவாய்ந்த தருணம் என்று புகழ்ந்தார். இந்த புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அரபு எம்.பி. அகமது டிபி, “இந்த மசோதா நிறைவேறி இருப்பது, ஜனநாயகம் செத்துவிட்டதை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP