உருவானது 'ஜெய்' கூட்டணி! மோடி அசத்தல்

ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் முதல் எழுத்துகளை சேர்த்து 'ஜெய்' என்ற புதிய கூட்டணி அர்ஜென்டினாவில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய் என்ற ஹிந்தி சொல்லுக்கு வெற்றி என அர்த்தம் என்று மோடி தெரிவித்தார்.
 | 

உருவானது 'ஜெய்' கூட்டணி! மோடி அசத்தல்

அர்ஜென்டினாவின் புயினோஸ் ஏரீஸ் நகரில் ஜி- 20 நாடுகளின் 13-ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  ஜப்பான் அதிபர் ஜின்ஜோ அபே ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து மூன்று தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி 'ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் முதல் எழுத்துகளை சேர்த்து 'ஜெய்' என்ற புதிய கூட்டணி  இன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'ஜெய்' என்ற ஹிந்தி சொல்லுக்கு 'வெற்றி'  என அர்த்தம். இந்த சொல்லுக்கு ஏற்றாற்போல், இக்கூட்டணி உலக அர்ங்கில் வெற்றி கூட்டணியாக அமையும்' என மோடி  நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP