இஸ்ரேல் காஸா எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு: 4 வீரர்கள் படுகாயம்

இஸ்ரேலிய ராணுவப்படைகள் தங்கியுள்ள பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
 | 

இஸ்ரேல் காஸா எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு: 4 வீரர்கள் படுகாயம்

இஸ்ரேலிய ராணுவப்படைகள் தங்கியுள்ள பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

காஸா எல்லைப் பகுதியின் கிழக்குப் பகுதியில் நேற்று இஸ்ரேல் ராணுவ படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அந்த சமயத்தில் அங்கு திடீரென ஒரு குண்டு வெடித்ததில் அங்குள்ள ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டன. மேலும் அந்த ராணுவ முகாம்களைச் சேர்ந்த 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதான்யாஹு, "காஸா எல்லைப்பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது. அங்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP