ஈரான் : வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 -ஆக அதிகரிப்பு

ஈரான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிாிழந்தோின் எண்ணிக்கை 76ஆக அதிகாித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயதால் காரணமாக ஈரான் நாட்டில் அண்மையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 | 

ஈரான் : வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 -ஆக அதிகரிப்பு

ஈரானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிாிழந்தோரின் எண்ணிக்கை 76 -ஆக அதிகாித்துள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக, ஈரானில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதன் காரணமாக வீடுகள், சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்திற்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்தன. 725 மேம்பாலங்கள் முற்றிலும் இடிந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர். 

இந்த நிலையில், வெள்ளம் காரணமாக தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 -ஆக அதிகரித்துள்ளதாக, ஈரான் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்கு ஈரான் பகுதிகளுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP