இந்தோனேசியா: உயிரிழப்பு 832 மேல் என பேரிடர் மீட்புப் படை அறிவிப்பு 

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 | 

வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் இரு தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுலவேசி தீவு பகுதியை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள், கடலோர பகுதிகளை உள்ளிழித்தது. இந்த பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை தெரியவராமல் இருந்தது. ஏனெனில் நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தேடப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டது. அலைகள் ஓய்ந்த நிலையில் உடல்கள் ஆங்காங்கே ஒதுங்கி கிடக்கின்றன. இதனை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகிறது.

இந்தோனேசியா: உயிரிழப்பு 832 மேல் என பேரிடர் மீட்புப் படை அறிவிப்பு 

இது குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 832 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்தது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாலும், காயமடைந்துள்ளதாலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடையவை: எங்கு காணினும் சடலங்கள்; உயிரிழப்பு 400 ஆனது... இந்தோனேசிய மக்கள் தவிப்பு

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP