ஜெர்மனியில் இந்தியர் குத்திக்கொலை

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்கள் ஜெர்மனியில் உள்ள முனீச் நகரம் அருகே வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரும் வழியில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளனர்
 | 

ஜெர்மனியில் இந்தியர் குத்திக்கொலை

ஜெர்மனி வாழ் இந்தியர்  ஓருவர்  கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவரின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் முனீச் நகரம் அருகே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரசாந்தும், அவரது மனைவி ஸ்மிதாவும் சேர்ந்து கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்குத் திரும்பி வரும்போது திடீரென ஓர் நபரால் கத்தியால் சராமாரியாக கத்தியால் குத்தி தாக்கப்பட்டனர். அதில் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்மிதா காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

முனிச் நகரில் குடியேறி இருக்கும் மற்றொரு வெளி நாட்டுக்காரர் இக்கொலையில் ஈடுபட்டுள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்ததகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த்-ஸ்மிதாவின் 2 குழந்தைகளையும் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP