இந்திய பயணி உயிரிழப்பு- அபுதாபியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

புதுடெல்லியிலிருந்து ஐக்கிய அரபு அமிரகதுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த இந்திய பயணி உயிரிழந்ததையடுத்து அந்த விமானம் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 | 

தலைநகர் புதுடெல்லியிலிருந்து நேற்று இரவு ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள மிலன் நகருக்கு அலிடாலியா விமானம் சென்று கொண்டிருந்தது. அபுதாபி அருகே அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் சந்திர சயனி என்ற 52 வயது பயணி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

அவருடன் அவருடைய மகன் ஹீரா லால் பயணம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த விமானி உடனடியாக அபுதாபி விமான நிலையத்துக்கு தகவல் தந்து விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.

இதையடுத்து அனுமதி வழங்கப்பட்டு அந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் கைலாஷ் சந்திர சயனியின் உடல் இறக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பபட்டது.

சயனியின் மகன் ஹீரா லாலிடம் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது தந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த கைலாஷின் உடல் எதியாட் விமானம் மூலம் இன்று இந்தியா கொண்டு வரப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ராஜமுருகன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP