கென்யா தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் விடுத்து இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 | 

கென்யா தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் விடுத்து இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள 'டசிட் டி2' என்ற நட்சத்திர ஓட்டலில் இரு தினங்களுக்கு முன் திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, பின்னர் ஓட்டலில் இருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் கென்யா ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலில் கென்யாவை சேர்ந்த 16 பேர், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்கர் ஒருவர், ஆப்பிரிக்க பூர்வீகம் கொண்ட மூன்று பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு சோமாலியா நாட்டைச் சேர்ந்த அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "கென்யா டசிட் டி2 ஹோட்டலில் அப்பாவி மக்களை கொன்ற இந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்" என தெரிவித்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP