ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் இந்திய அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே இதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை என பிரான்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
 | 

ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான்: பிரான்ஸ் விளக்கம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸை தேர்வு செய்தது இந்தியா தான் என பிரான்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

இந்நிலையில் இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் 'டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு தனிப்பட்டமுறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று கூறியிருந்தார். 

இவரது கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசின் மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்தன. இந்த நிலையில், பிரான்ஸ் அரசு இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், "பிரான்ஸ் நிறுவனங்களுக்கு தங்களின் ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய முழு சுதந்திரம் உள்ளது. எனவே ரிலையன்ஸ் நிறுவனம், ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பங்குதாராக தேர்வு செய்யப்பட்டதில் எங்களின் தலையீடு ஏதும் இல்லை

இந்நிலையில், தங்களின் பங்குதாரரரை தேர்வு செய்ய பிரான்ஸை சேர்ந்த நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தகளில் பிரான்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விவகாரத்திலும் இந்திய அரசு பரிந்துரைத்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே இதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை. இந்த ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸை தேர்தெடுத்தது இந்தியா தான்" என தெரிவித்துள்ளது.

இதனால் ரஃபேல் விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP