இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்- ஐ.நா சபை பொதுச்செயலாளர் வேண்டுகோள்

அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 | 

புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ- முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி மேற்கொண்ட தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தருவதாகவும் குற்றஞ்சாட்டியது.

இதனையடுத்து, இரு நாடுகளிடையேயும் பதற்றம் நிலவி வருகிறது.  புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும், பதற்றம் குறைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை பொதுச் செயலர் அண்டோனியோ கட்டெர்ரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP