படம் பேசுது: 'உலகத் தலைவர்கள் நடுவே கைக் கட்டி இருக்கும் ட்ரம்ப்'

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கை கட்டி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
 | 

படம் பேசுது: 'உலகத் தலைவர்கள் நடுவே கைக் கட்டி இருக்கும் ட்ரம்ப்'

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கை கட்டி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஜி7 உச்சி மாநாட்டின் போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில், ஏஞ்சலா மெர்க்கல் மற்ற உலக தலைவர்கள் இடையே எதையோ பேசும் போது, டொனால்ட் ட்ரம்ப் கை கட்டி, குழந்தை போல் கண்களை சிமிட்டி அமர்ந்துள்ளார். மற்ற தலைவர்களின் முக பாவங்கள் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ஜப்பான் பிரதமர் அபேயும் பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் முகபாவமும் கூட கலாய்ப்புக்கு உள்ளாகியுள்ளன. 

ஜெர்மன் நாட்டு அரசு புகைப்பட கலைஞர் ஜெஸ்கோ டென்சல் எடுத்த இந்தப் புகைப்படத்தை, உச்சி மாநாட்டின் இடையே வெள்ளை மாளிகை வெளியிட்டது. அந்த செய்திக் குறிப்பில், "அதிபர் ட்ர்மப் பேச்சை கவனித்து கொண்டிருக்கும் ஜப்பான் பிரதமர் அபே, பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் மெர்க்கல்" என படத்துக்கு தலைப்பிடப்பட்டது. 

இதனைத தொடர்ந்து உடனடியாக ட்வீட் செய்த மெர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேபென் சைபெர்ட், "மேசையின் மீது உறுதியாக கை வைத்தபடி பேசும் மெர்க்கலிடம், கைக் கட்டி கண் சிமிட்டு அமர்ந்திருக்கும் ட்ரம்ப்" எனக் குறிப்பிடப்பட்டது. 

இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதுடன், நகைச்சுவையான வசனங்களையும் கோர்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்தப் படம் ஜி7 உச்சி மாநாட்டின் போது நிலவிய கருத்து முரணை வெளிப்படுத்துவதாக அமைத்துள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP