என்னால் 41 மணிநேரம் பயணம் செய்து இந்தியாவுக்கு வரமுடியாது

41 மணிநேரம் பயணம் செய்து தன்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார்.
 | 

என்னால் 41 மணிநேரம் பயணம் செய்து இந்தியாவுக்கு வரமுடியாது

41 மணிநேரம் பயணம் செய்து தன்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13 ஆயிரம் கோடி சட்ட விரோதப் பண பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. 

கீதாஞ்சலி நிறுவனத்தின் சேர்மேனாக இருந்தவர்தான் மெகுல் சோக்சி. கடன் வாங்கியதிலும், பஞ்சாப் வங்கியை ஏமாற்றியதிலும் இவருக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்படுகிறது . இவர் மீது வழக்கு பதிவு‌ செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்சி தற்போது மேற்கு இந்தியா தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் வசித்து வருகிறார். இவர் தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கை விசாரிக்கும் டெல்லி நிதி மோசடி தடுப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், என்னால் விசாரணைக்காக இந்தியா வர முடியாது. எனக்கு உடல் நிலை சரியில்லை. இங்கிருந்து இந்தியா வர விமானத்தில் 41 மணி நேரம் ஆகும். அவ்வளவு நேரம் பயணித்து என்னால் இந்தியா வந்து விசாரணையில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP