உள்ளாடையில் இந்து கடவுள் படம்: மக்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஃபேஷன் ஷோவில், பங்கேற்பாளர்கள் இந்து கடவுள் உருவம் பதித்த உள்ளாடைகள் அணிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நிறுவனம் மன்னிப்பு கோரியது. .
 | 

உள்ளாடையில் இந்து கடவுள் படம்: மக்கள் அதிர்ச்சி!

உள்ளாடையில் இந்து கடவுள் படம்: மக்கள் அதிர்ச்சி!ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஃபேஷன் ஷோவில், பங்கேற்பாளர்கள் இந்து கடவுள் உருவம் பதித்த உள்ளாடைகள் அணிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நிறுவனம் மன்னிப்பு கோரியது. . 

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ரோஸ்மவுண்ட் ஆஸ்திரேலிய ஃபேஷன் வீக் நடைபெற்றது. பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ இதனை நடத்தியது. அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்தனர். அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால், இதைக் கண்ட அங்குள்ள இந்து மதத்தித்னர் அதிர்ச்சியடைந்தனர். 

ஆஸ்திரேலிய இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு,  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலும், ஆஸ்திரேலிய கொடிகளை எரித்து சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உள்ளாடையில் இந்து கடவுள் படம்: மக்கள் அதிர்ச்சி!

போராட்டத்தை தொடர்ந்து, இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். 

இதையடுத்து லிசா புளூ நிறுவனம், இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது, விளம்பரமும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP