ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு- 120 விமானங்கள் ரத்து

ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான மூனிச் நகரில்,கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
 | 

ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு- 120 விமானங்கள் ரத்து

ஜெர்மனி நாட்டில் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் மூனிச் நகரிலிருந்து புறப்பட இருந்த 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான மூனிச் நகரில், கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது. கனமழை போல், பனிவிழுவதால், விமானங்கள் இறங்கவும், புறப்பட்டுச் செல்லவும், அனுமதிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் நாட்டின் 2வது பெரிய விமான நிலையமான மூனிச் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 120 பயணிகள் விமானங்கள் கடும் பனிப்பொழிவால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விமான ஓடுபாதையில் உள்ள பனிகட்டிகள் அகற்றும் வேலை முடிந்தால் தான் விமான சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை முடிந்து, அவரவர் இடங்களுக்குச் செல்ல வந்தவர்கள், இதனால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP