நேபாளத்தில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

நேபாளம் நாட்டில் கனமழை பெய்த காரணத்தினால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
 | 

நேபாளத்தில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

நேபாளம் நாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 

பருவமழை காரணமாக நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பலியானோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன 24 பேரை தேடும் பணியில்  மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP