நேபாளத்தில் கனமழை:பலி 78 ஆக உயர்வு!

நேபாளம் நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இதுவரை 78 ஆக அதிகரித்துள்ளது.
 | 

நேபாளத்தில் கனமழை:பலி 78 ஆக உயர்வு!

நேபாளம் நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. 

பருவமழை காரணமாக நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த கனமழையினால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இதுவரை 78 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போன 32 பேரைத் தேடும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP