ஜப்பானில் கனமழை: இருவர் பலி; 6 லட்சம் பேர்வெளியேற்றம்

ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 | 

ஜப்பான் நாட்டின் தீவான குயூஷூவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சகா மற்றும் நாகசாகி உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். கனமழை எச்சரிக்கை தொடர்வதை அடுத்து, சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP