பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..!

பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..!
 | 

பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அந்த நாட்டின் மத்திய பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பாதுகாப்பு படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அதிகாரி ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். 

பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..!

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார்? தாக்குதலுக்கான பின்னணி குறித்தும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP