Logo

துப்பாக்கி சட்டங்கள் நிச்சயம் மாறும்: நியூஸிலாந்து பிரதமர் உறுதி

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டின் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
 | 

துப்பாக்கி சட்டங்கள் நிச்சயம் மாறும்: நியூஸிலாந்து பிரதமர் உறுதி

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் நேற்று நடைபெற்ற கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளை ஆதிக்க இனவெறி பிடித்த ஒரு நபர், வெள்ளிக் கிழமை தொழுகையின் போது, இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். துப்பாக்கிச் சூட்டை குற்றவாளி வீடியோ மூலம் சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பிய நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், அந்நாட்டின் துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது "மொத்தத்தில் குற்றவாளி, ஐந்து துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அதில் 2 செமி- ஆட்டோமேட்டிக் ரகத்தை சேர்ந்தவை. இரண்டு துப்பாக்கிகள் ஷாட்கன் ரகத்தை சேர்ந்தவை. ஒரு லீவர்-ஆக்சன் துப்பாக்கியும் இதில் அடங்கும். குற்றவாளியிடம் துப்பாக்கி லைசன்ஸ் இருந்ததாக தெரியவந்துள்ளது" என்றார். 

குற்றவாளியின் பெயர் ப்ரென்ட்டன் டர்ரன்ட் என்றும், நவம்பர் 2017ல் துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற அவர், டிசம்பர் 2017 முதல் துப்பாக்கிகளை வாங்கத் துவங்கி உள்ளார், என்றும் கூறினார். மேலும், "துப்பாக்கி லைசென்ஸ் வாங்கியது முதல் இந்த சம்பவம் வரை என்ன நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நமது துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவோம்" என்றும் பிரதமர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP