கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு!

கவுதமாலா எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
 | 

கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு!

கவுதமாலா எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. 

கவுதமாலா தலைநகர் 'கவுதமாலா சிட்டியில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது பியூகோ எரிமலை. சமீபத்தில் இந்த எரிமலை சீற்றம் ஏற்பட்டு வெடித்தது.எரிமலை வெடித்து வேகமாக எரிமலைக்குழம்பு வெளியேறியதால் அதனை வேடிக்கை பார்த்த பலர் உயிரிழந்தனர். முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதும் எரிமலையின் சீற்றம் அதிகரித்த காரணத்தினால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. சுமார் 8 முதல் 12 கிமீ வரை எரிமலைக்குழம்பு வெளியேறி பரவியுள்ளது.

இதனால் தற்போதைய நிலவரப்படி, 109 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. எரிமலை வெடிப்பு பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து இன்னும் முழுமையான விபரங்கள் இல்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  தொடர் எரிமலை சீற்றத்தினால் மீட்புப்பணிகள் சற்று மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. எரிமலை வெடிப்பினால் விமான போக்குவரத்தும் அப்பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP