Logo

கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 என பதிவானது!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவானது.
 | 

கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 என பதிவானது!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவானது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கே உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட்(Ridgecrest) என்ற நகரின் அருகே அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் வேகமாக குலுங்கியது. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். 

இந்த நிலநடுக்கத்தில் பொருட் சேதம் ஏற்பட்டிருக்கலாம்; அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் இதுபோன்ற பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP