விளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை

2-Year-Old Locked iPhone For 47 Years By Entering Wrong Passcode
 | 

விளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை

விளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை

ஷாங்காய் நகரில் வசிக்கும் இரண்டு வயது குழந்தை தனது தாயின் ஐபோனை 47 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியாதபடி லாக் செய்துவிட்டது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் செல்போனுக்கு பாதுகாப்பு கருதி பாஸ்வேர்டு போடுவது வழக்கம். தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டினை பதிவு செய்ததால் செல்போன் லாக் ஆகிவிடும். ஒவ்வொரு முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போதும் சில நிமிடங்கள் அளவு ஐபோன் லாக் செய்யப்படும். அதேபோல் ஐபோன் 2.5 கோடி நிமிடங்கள், அதாவது 47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்டுவிட்டது.

ஆறு முறை தொடர்ச்சியாக தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் டிசேபிள் செய்யப்படும், பத்து முறை தவறான பாஸ்வேர்டு பதிவு செய்யும் போது ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.

விளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை

ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் ஊழியர் லூக்கோ இதுகுறித்து கூறும் போது, ’லாக் செய்த ஐபோனை சரி செய்ய சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது ஐபோனில் உள்ள தகவல்களை முற்றுலுமாக அழித்து அனைத்து ஃபைல்களையும் ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐபோன் உரிமையாளர் லு கூறுகையில், "என்னுடைய பேரனிடம் உன்னுடைய அப்பாதான் இப்படி போனை லாக் செய்துவிட்டார் என்று கூறும் அளவுக்கு பொறுமையில்லை. இருப்பினும் மொபைல் போனில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அவற்றை இழக்கவும் விரும்பவில்லை. நிலைமை சரியாகிவிடும் என்று காத்திருந்தேன். ஆனால், ஒரு மாதத்துக்கு மேல் மொபைல் போனை சும்மா வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால், போனில் உள்ள தகவல்களை அழித்து, ஃபேக்டரி ரீசெட் கொடுக்க முடிவெடுத்தேன்" என்றார்.

விளையாட்டு விபரீதமானது: ஐபோனை 47 ஆண்டுகளுக்கு லாக் செய்த குழந்தை

பல ஆண்டுகளுக்கு மொபைல் போன் லாக் செய்யப்படுவது இது முதல்முறை இல்லை. அதேபோல், 47 ஆண்டுகள் என்பதும் பெரியது இல்லை. இதற்கு முன்பு ஒரு ஐபோன் 80 ஆண்டுகளுக்கு லாக் ஆகிவிட்டது. 

லு-வுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மொபைல் போனை குழந்தைகள் விளையாட்டுப் பொருள்போல அவர்கள் கையில் கொடுப்பது அதிகரித்துள்ளது. போன் லாக் ஆவதற்கான வாய்ப்பு அதிகம். அந்தமாதிரியான நேரத்தில், தகவல்களை அழித்து, ஃபேக்டரி ரீசெட் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த மாதிரியான நேரத்தில் முக்கியமான தகவல், போட்டோஸ், வீடியோஸ் உள்ளிட்டவற்றை இழக்காமல் இருக்க அவ்வப்போது பேக்அப் எடுத்து வைத்துக்கொள்வத நல்லது. அதேபோல், குழந்தைகள் பார்வையில் இருந்து மொபைல் போனை தள்ளி வைப்பது எல்லா பிரச்னைக்கும் தீர்வாக இருக்கும் என்கின்றனர் மொபைல் போன் நிபுணர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP