ஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி!

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

ஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி!

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜி-20 எனப்படும் வளர்ச்சியடைந்த/வளரும் நாடுகளைக் கொண்ட 20 நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான ஜி -20 மாநாடு ஜுன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் நடைபெறுகிறது. 

ஜி-20 மாநாடு: ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி!

இதில் கலந்துகொள்வதற்காக, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஜப்பானுக்கு புறப்பட்டுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று காலை ஜப்பானின் ஒசாகா நகரை அடைந்தார். ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

மேலும், ஜப்பானில் உள்ள இந்தியர்களும் பிரதமருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே- வை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP