ஜப்பானில் கோலாகலமாக தொடங்கிய ஜி-20 மாநாடு!

ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ஜி- 20 மாநாடு சற்றுமுன் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
 | 

இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் சென்றார். ஜப்பான் ஒசாகா நகரில் ஜப்பான் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள இந்திய மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஜப்பானில் கோலாகலமாக தொடங்கிய ஜி-20 மாநாடு!

முதலாவதாக ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளிகள் முன்னிலையில் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஜப்பானில் கோலாகலமாக தொடங்கிய ஜி-20 மாநாடு!

தொடர் நிகழ்வாக, ஜப்பான் ஒசாகா நகரில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-யையும் தனியே சந்தித்து பேசினார். இதுபோன்று முக்கிய நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே சந்தித்து பேசிக்கொண்டனர். 

தொடர்ந்து, அனைத்து நாடுகளின் தலைவர்களும் இணைந்து போட்டோ எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர் சற்றுமுன் ஒசாகாவில் ஜி-20 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP