ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவச ‛பீர்’

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. மக்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படுகிறது.
 | 

ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவச ‛பீர்’

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், வெயில் வாட்டுகிறது.

அடிலெய்டு வடக்கு பகுதியில்,  49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே நிலை தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள, 13 நகரங்களில் நிலவுகிறது. வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்க, மக்களுக்கு குளிர்ச்சியான பீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கள், மர நிழலில் தஞ்சமடைந்துள்ளனர். கடும் வியர்வையில் இருந்து தப்பிக்க, குளிர்சாதன வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளது. இதனால், பலவிதமான வெப்ப நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இதுவரை, 44 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP