ஞாயிறு விடுமுறை அளிக்காத நிறுவனத்திற்கு ரூ.153 கோடி அபராதம்

மத நம்பிக்கையில் தலையிட்டு, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்க மறுத்து, வேறு காரணங்கள் கூறி, பெண் தொழிலாளியை பணி நீக்கம் செய்த நிறுவனத்திற்கு, 153 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
 | 

ஞாயிறு விடுமுறை அளிக்காத நிறுவனத்திற்கு ரூ.153 கோடி அபராதம்

அமெரிக்காவில், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்காத ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக, அங்கு பணியாற்றிய பெண் தொழிலாளி வழக்கு தொடர்ந்தார். அவருக்கு, 153 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் படி, 
அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள, ஒரு தனியார் ஓட்டலில், 10 ஆண்டுகளாக பணியாற்றிய பெண் தொழிலாளி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வார விடுமுறை நாளாக எடுத்துக் கொண்டார்.

பல ஆண்டுகள் தொடர்ந்து அதே கிழமை வார விடுப்பு எடுத்த நிலையில், 2015ல், புதிதாக வேலைக்கு சேர்ந்த, மாஸ்டர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிறு அன்று பணிக்கு வரும்படி கட்டளையிட்டார்.

ஞாயிற்றுக் கிழமை அன்று, தான் தேவாலயம் செல்ல வேண்டும் என்றும், அங்கு இறைப்பணியில் ஈடுபடுவதாகவும் கூறிய பெண் தொழிலாளி, மாஸ்டரின் கட்டளையை ஏற்க மறுத்துவிட்டார்.

சில மாதங்களுக்குப் பின், அந்த பெண் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனம், அவரை பணி நீக்கம் செய்தது. இதனால் கோபமடைந்த அந்த பெண், பாதிரியாரிடம் கூறி, தனக்கு நடந்த அநியாயத்தை தட்டி கேட்க முடிவெடுத்தார். 

இது தொடர்பாக, அந்த பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத நம்பிக்கையில் தலையிட்டு, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்க மறுத்து, வேறு காரணங்கள் கூறி, பெண் தொழிலாளியை பணி நீக்கம் செய்த நிறுவனத்திற்கு, 153 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

அந்த தொகையை, பணி நீக்கம் செய்த பெண் தொழிலாளியிடம் வழங்கவும் உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP