சீர்த்திருத்தம் காணும் எத்தியோப்பியா: அமைச்சரவையில் 50% பெண்கள்

எத்தியோப்பியாவில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் முதல் முறையாக அமைச்சரவையில் ஐம்பது சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக அமைதிக்கு என புதிய அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
 | 

சீர்த்திருத்தம் காணும் எத்தியோப்பியா: அமைச்சரவையில் 50% பெண்கள்

எத்தியோப்பியாவில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் முதல் முறையாக அமைச்சரவையில் ஐம்பது சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். முக்கியமாக அமைதிக்கு என புதிய அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஏப்ரல் மாதம் அபீ  அகமது பதவியேற்றார். பிரதமரானது முதலே தனது சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளார். ஊடகங்களால் இவர் நெல்சன் மண்டேலா, ஜஸ்டின் ட்ரூடோ, ஒபாமா போன்றோருடன் வெகு சீக்கிரமே ஒப்பிட்டு பேசப்படுகிறார். 

இந்த நிலையில் தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் கவனத்தைப் ஈர்த்துள்ளது. அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 28லிருந்து 20ஆகக் குறைத்துள்ள அவர் அதில் 50% பெண் அமைச்சர்களுக்கு இடம் வழங்கியுள்ளார். 

முக்கியமான துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பு பெண் அமைச்சர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக ஆயிஷா நுகனது என்பவரிடம் பாதுகாப்புத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதிதாக அமைதியைப் பேணுவதற்கான அமைச்சரகத்தை அந்நாட்டு பிரதமர் அபை உருவாக்கியுள்ளார். இந்த புதிய துறையையும் பெண் அமைச்சரிடமே ஒப்படைத்துள்ளார். இது காவல்துறை மற்றும் நுண்ணறிவுப் படையை மேற்பார்வையிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கைக்கு காரணம் கூறும் அபீ , "ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்" என்று அங்கு நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். 

Newtm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP