எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை: நைஜீரிய ஆளுநர்

நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் என்ற நாட்டின் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா. இவர் தனது பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இவரது பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 | 

எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை: நைஜீரிய ஆளுநர்

நைஜீரிய நாட்டு ஆளுநர் ஒருவர் கடந்த எட்டு ஆண்டு பதவி காலத்தில் ஊதியம் பெற்றதில்லை என்று கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நைஜீரியாவின் தென் மேற்கில் உன்ள ஓஷுன் என்ற நாட்டின் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா. இவர் தனது பணியில் இருந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் பெறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இவரது பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

ஓஷுன் ஆளுநர் ராவுஃப் அரெக்பெஸோலா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ''இந்த நாடு எனக்கு சாப்பாடு போட்டு, வாகனங்கள் அளித்து, தங்க இடமும் வழங்கியுள்ளதால் பணத் தேவை இருக்கவில்லை. இதெல்லாம் என்னிடம் இருந்தபோது, எனக்கு பணம் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

தற்போது அவர் பணியில் இருந்து விடைபெறும் நேரத்தில் இதனை கூறியுள்ளது விமர்சனத்தையும் பெற்றுள்ளது.  அவர் பேசியுள்ள வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை என்று சிலர் சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP