எகிப்து திரைப்பட விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்ததாக நடிகை மீது வழக்கு 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு கவர்ச்சிகரமாக உடை அணிந்த வந்ததாக நடிகை ரானியா யூசெப் மீது கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

எகிப்து திரைப்பட விழாவுக்கு கவர்ச்சி உடையில் வந்ததாக நடிகை மீது வழக்கு 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின்போது கவர்ச்சிகரமாக உடை அணிந்த வந்ததாக நடிகை ரானியா யூசெப் மீது கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் 'கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா' நடந்து வருகிறது. இந்த விழாவில் அந்நாட்டின் நடிகை ரானியா யூசெப், தொடை தெரிகிற அளவுக்கு ஆபாசமாக மெல்லிய உடை அணிந்து வந்து கலந்துகொண்டார். இதனால் விழா அரங்கில் சர்ச்சை ஏற்பட்டது.

இது குறித்து அவர் மீது அம்ரோ அப்தெல் சலாம், சமிர் சப்ரி என்னும் 2 வழக்கறிஞர்கள் கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் நடிகை ரானியா யூசெப் ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டுவதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, அவ்வாறு உடை உடுத்திக்கொண்டு திரைப்பட விழாவில் தோன்றியதற்காக நடிகை ரானியா யூசெப் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இப்படி நான் உடை உடுத்தியது இதுவே முதல் முறை, இது பெருத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என நான் உணரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.  எகிப்து சமூகத்தின் மதிப்பினைக் காக்க உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீவிரமான இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்றிவரும் நாடாக எகிப்து திகழ்ந்து வருகிறது. அங்குள்ள சட்டப்படி நடிகை ரானியா யூசெப் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படலாம். இவர் மீதான வழக்கு ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP