விக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு ஈகுவேடார் குடியுரிமை

விக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு ஈகுவேடார் குடியுரிமை
 | 

விக்கிலீக்ஸ் அசாஞ்சுக்கு ஈகுவேடார் குடியுரிமை


சர்வதேச தலைவர்கள், மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இணையதள கணக்குகளை ஹேக் செய்து அதிலிருந்து பல ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் அமைப்பின் நிறுவனர் ஜூலியன் அசாஞ், ஈகுவேடார் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். 

பல ஆவணங்களை லீக் செய்ததால், உலக நாடுகளின் விரோதத்துக்கு ஆளான அசாஞ்,ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். அசாஞ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2012ம் ஆண்டு ஒரு ஸ்வீடன் பெண் புகார் அளித்தார். அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அப்போது லண்டனில் இருந்த அவர், நாடுகடத்தப்படாமல் தப்பிக்க, ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் வசித்து வரும் அவர், கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரி க்ளிண்டனுக்கு எதிராக பல ஹேக் செய்யப்பட்ட ஆவணங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

அவரை தூதரகத்தில் இருந்து வெளியே கொண்டு வர ஈகுவேடார் நாட்டு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12ம் தேதி, அசாஞ் ஈகுவேடார் நாட்டின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பினோசா தெரிவித்தார். அவரை பத்திரமாக ஈகுவேடார் கொண்டு வர பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP