பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..
 | 

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டனாவ் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் தவோ நகரில் இருந்து 61 கி.மீ. தென்மேற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தவோ, மாட்டனாவ் ஆகிய நகரங்களில் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..

தவோ நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 20 மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சேத விவரம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..இந்த நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் எரிமலை மற்றும் பூவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டப்போதும் அங்கு சுமாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP