ஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 மற்றும் 6.3 என பதிவாகி உள்ளது. இருந்தும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
 | 

ஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.6, 6.3 என பதிவாகி உள்ளது.

ஜப்பானின் மியாசகி(Miyazaki) என்ற நகருக்கு தென் கிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அதே பகுதியில் காலை 9 மணிக்கு ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகி உள்ளது. தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்துளளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. அதேபோன்று, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP