சான் பிரான்சிஸ்கோவில் 1,80,000 மக்களை வெளியேற்ற முடிவு !

சான் பிரான்சிஸ்கோவின் வடக்கே கின்கேட் பகுதியில் பற்றிய தீ சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது.
 | 

சான் பிரான்சிஸ்கோவில் 1,80,000 மக்களை வெளியேற்ற முடிவு !

சான் பிரான்சிஸ்கோவின் வடக்கே கின்கேட் பகுதியில் பற்றிய  தீ சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவிற்கு  பரவியுள்ளது. மேலும் அதிக வெடிப்புகளைத் தடுக்க பே ஏரியாவின் பெரும்பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் அப்பகுதியில் வசிக்கு 1,80,000 பேர் தங்களது வாழ்வதாரங்களை இழந்துள்ளனர். 

இந்நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் அப்பகுதி மக்களை கட்டாயமாக வெளியேற்றம் முடிவினை சான் பிரான்சிஸ்கோ அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதோடு இந்த தீ விபத்தில் 31 வீடுகள் உட்பட 79 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 14 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என மாநில தீயணைப்பு நிறுவனமான கால் ஃபயர் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP