ஆப்கானில் 12 குழந்தைகள் உயிரிழப்பு! காரணம் தெரியாமல் முழிக்கும் மருத்துவர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

ஆப்கானில் 12 குழந்தைகள் உயிரிழப்பு! காரணம் தெரியாமல் முழிக்கும் மருத்துவர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் இன்று ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. ஆனால் இந்த குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது உயிரிழந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு செய்ய தலைநகர் காபூலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP